Home LOCAL பாடசாலை முதலாம் தவணை இன்று ஆரம்பம்

பாடசாலை முதலாம் தவணை இன்று ஆரம்பம்

0
பாடசாலை முதலாம் தவணை இன்று ஆரம்பம்

2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதற்கட்டம் இன்று (27) ஆரம்பமாகிறது.

எவ்வாறாயினும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த பாடசாலைகள் மீண்டும் ஏப்ரல் 17ம் திகதி ஆரம்பமாக உள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மே 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்காக மே 13 ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மே 25ம் திகதி ஆரம்பமாகிறது.

முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைப்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here