Home LOCAL கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

0
கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

22,000 பயிற்சி பெறாத அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாடசாலைகளில் கற்பிப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டதன் மூலம், ஆரம்பக் கல்வியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

தான் கல்வி அமைச்சர் பதவியில் இருக்கும் வரை எந்தவொரு பாடசாலையும் தேசிய பாடசாலையாக மாற்றப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த,

1,000 தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படும் என்று கூறினர். ஆனால் தற்போது 499 தேசிய பாடசாலைகளே உள்ளன. இவற்றில் 35,000 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

மேலும், இவர்களில் 14,000 ஆசிரியர்கள் இடமாற்றம் கோரியுள்ளனர். இதற்கு 20 முக்கிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இதை நான் தலையிட்டு இதை தீர்த்து வைத்தேன்.

499 தேசிய பாடசாலைகளில் 35,000 ஆசிரியர்கள் உள்ள நிலையில், 1,000 பாடசாலைகளை உருவாக்கினால் 100,000 ஆசிரியர்கள் இருப்பார்கள். இது தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.

இந்த நிலையில், அபிவிருத்தி அதிகாரிகள் 22,000 பேரை தேர்வு இல்லாமல் எடுத்து, பாடம் நடத்த விட்டால் சிரியானதா? என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here