IMF இற்கு அனுப்பப்பட்ட கடிதம்!

0
1

சீன எக்சிம் வங்கியிடம் இருந்து நிதி உறுதிக்கான கடிதம் நேற்றிரவு அரசாங்கத்திற்கு கிடைத்ததாகவும், மத்திய வங்கி ஆளுநரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்ட உடன்பாட்டு கடிதம் அன்றைய தினம் இரவே சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட உரை ஒன்றை நிகழ்த்திய போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வீதி வரைபடம் என்பவற்றுடன் அந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here