தேர்தலை தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல்

0
1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதன் காரணமாக விசாரணைகளுக்காக வேறொரு திகதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here