மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையின் ஸாஹிரா நடை பவனி நாளை நடை பெறவுள்ளது.
ஞாயிறன்று காலை 8.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இருந்து ஆரம்ப மாகும் இந்த நடை பவனி ஸாஹிரா வீதி, ஹசன் மாவத்தை, ஹெம்மாதகம வீதி ஊடாக மாவனல்லை நகரை கடந்து ரம்புக் கனை வீதி, மஹவத்தை தக்கியா வீதி, மாராவை வீதி ஊடாக மீண்டும் பாடசாலை மைதானத்தை அடையவுள்ளது.
ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் தொடராக இந்த நடை பவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, பாடசாலை செயற்பாட்டு செயலணி குழு ஆகியன இணைந்து இந்த நடை பவனியை ஏற்பாடு செய்யதுள்ளது.
