ஜனவரியில் இருந்து புதிய மாற்றம் – கஞ்சனவின் அதிரடி அறிவிப்பு

0
1

மின்சார சபையின் புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய கட்டிட நிர்மாண பணி 2021 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது.

அமைச்சருக்கும் மின்சார சபை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின் பட்டியல் மற்றும் பற்றுச் சீட்டுகளை இணையத்தின் ஊடாக மட்டுமே வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் மின்சார சபையின் செலவினங்களைக் குறைப்பதற்கும் சேவைகளை வினைத்திறனுடன் பேணுவதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here