சர்வதேச எய்ட்ஸ் தினம் இன்று(01).
”சமத்துவத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
HIV தொற்றுக்குள்ளானோரை தனிமைப்படுத்தாது, அவர்களின் தனித்துவம் மற்றும் மனித உரிமையை பாதுகாத்து, ஏனையவர்களை போன்று அவர்களின் இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்குடன் இம்முறை சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சர்வதேச எய்ட்ஸ் தினத்தின் தேசிய நிகழ்வு பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இன்று(01) பிற்பகல் 1.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.