சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
“Mein Schiff 5” என பெயரிடப்பட்ட கப்பல் முதன்முறையாக இலங்கைக்கு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலில் இருந்து 2000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் குழு கொழும்பில் பல இடங்களுக்குச் சென்று பல பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர், குறித்த சுற்றுலாப் பயணிகளும் தீவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது