Home LOCAL ஒரு வருடத்திற்கு 1,800 முறைப்பாடுகள்

ஒரு வருடத்திற்கு 1,800 முறைப்பாடுகள்

0
ஒரு வருடத்திற்கு 1,800 முறைப்பாடுகள்

இந்த வருடத்தில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 1,800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த வருடம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 1,861 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், 620 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதற்கு மேலதிகமாக சொத்துக்கள் தொடர்பான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் 64 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த ஆணைக்குழு, கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் சுமார் 50 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நிறுவன மட்டத்தில் 72 அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதுடன் மேலும் 328 முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக ஏனைய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் இருந்து இலஞ்ச சட்டத்துடன் தொடர்பில்லாத 719 முறைப்பாடுகளின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here