7 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இளைஞன் கைது

ஒரு தொகை தங்க பிஸ்கட்களை தனது உடலில் மறைத்து வைத்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) அதிகாலை 2 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலைய துப்பரவு செய்யும் பிரிவில் கடமையாற்றும் 25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனிடம் இருந்து 4,848 கிராம் நிறையுடைய 48 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தங்க பிஸ்கட்கள் சுமார் 7 கோடி ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தங்க பிஸ்கட் தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here