எரிசக்தி அமைச்சரின் எதிர்ப்பார்ப்பு

0
1

பாரிய நிதி நெருக்கடியில் இருக்கின்ற நிலைமையில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு டீசல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அனேகமாக நவம்பர் மாத இறுதியில் குறித்த டீசல் கப்பல் இலங்கையை வந்தடையும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அபுதாபியில் தொழில்துறை மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், மாநாட்டின் பின்னர் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here