Home LOCAL IMF முகாமைத்துவப் பணிப்பாளர் விசேட அறிவிப்பு

IMF முகாமைத்துவப் பணிப்பாளர் விசேட அறிவிப்பு

0

இலங்கையின் பொருளாதார இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்ட முடிந்ததில் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தொிவித்துள்ளார்.

இது இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னேற்றமாக இருக்கும் என அவர் டுவிட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர், ஊழியர் மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதுடன், 48 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டது.

இதேவேளை, வெளிநாட்டுக் கடன்களை முறையாகத் திட்டமிட்டு செயற்படுத்துவதனால் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை பங்களாதேஷ் எதிர்கொள்ளாது என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ஏஎன்ஐ செய்தி சேவைக்கு பேட்டியளித்த பங்களாதேஷ் பிரதமர், மக்களுக்கு பயனளிக்காத எந்த திட்டத்திற்கும் தனது அரசு பணத்தை செலவிடாது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here