மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பேண வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.