இரசாயன உரம் வழங்கக் கோரியும் அத்தியவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது.
நுவரெலியா விவசாய சங்கங்களும், பௌத்த குருமார்களும் இணைந்து இன்று (17) காலை நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுட்டபட்டதுடன் எதிர்ப்பு பேரணியையும் முன்னெடுத்தனர்.
உரம் தட்டுப்பாடு காரணமாக தமது விவசாய தொழிற்துறையை முன்னெடுக்க முடியாது பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் நுவரெலியா மக்கள் மட்டுமல்ல நாட்டு மக்களே பாதிப்படைந்துள்ளதாக கோசம் எழுப்பினர்.
பின்னர் நகரின் பிரதான வீதியூடாக எதிர்ப்பு பேரணியை ஆர்பாட்டக்காரர்கள் முன்னெடுத்ததுடன் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவின் கொடும்பாவியும் எரித்து எதிர்ப்பினை வெளியிட்டனர்.
விவசாய சங்கங்களின் இந்த ஆர்பாட்டத்திற்கு பௌத்த மதகுருமார்களும் இணைந்து கொண்டதுடன் நகரின் வர்த்த நிலையங்களும் இரண்டு மணித்தியாலங்கள் வரை மூடி தமது ஆதரவை வழங்கினர்