இராஜினாமா கடிதத்தை கையளித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தனது ராஜினாமா ஆவணத்தை அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்ட ராஜினாமா ஆவணம், தொடர்பிலான உண்மை தன்மை மற்றும் உறுதியை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ராஜினாமா தொடர்பிலான சட்ட ஆலோசனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த ஆவணம், ஜனாதிபதியின் ராஜினாமா கடிதமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியின் ராஜினாமா தொடர்பில் எவ்வாறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதத்தில் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் அலுவலகத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here