புதிய சாதனை படைத்த ஜனாதிபதி கோட்டாபயவின் விமான பயணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த விமானம் இன்று (14) மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

சௌதி அரேபியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தை ஏராளமானோர் தேடியுள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை அதிகமானோரினால் கண்காணிக்கப்பட்ட விமானமாக (most-tracked flight) இது மாறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலகம் முழுவதும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புளூம்பேர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Flightradar24.com இணையதளத் தரவுகளின்படி, GMT 7:43 வரை 5,000க்கும் மேற்பட்ட பயனர்கள் “Saudia flight 788” ஐத் தேடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here