ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றைய தினம் சிங்கப்பூரை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரை வந்தடைவார் என்ற எதிர்பார்ப்பில், அந்த நாட்டு விமான நிலையத்தின் விசேட பிரமுகர்கள் பிரிவிற்கு அண்மித்த பகுதியில் ஊடகவியலாளர்கள் காத்திருக்கின்றார்கள்.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரை வந்தடைவார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நேற்று அதிகாலை மாலைத்தீவு தலைநகர் மாலேயில் தரையிறங்கியிருந்தார்.
இந்த நிலையில், மாலைத்தீவிலிருந்து அவர் சிங்கப்பூரை இன்று சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.