முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று (06) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சந்தர்ப்பத்திலேயே இந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 5 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடம் வாக்குமூலங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.