டோக்கன் முறை இல்லை – யாரும் தப்பாக நினைக்க வேண்டாம்

0
1

எரிபொருள் வழங்குவதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டோக்கன் முறையானது ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மாத்திரமே அமுலில் இருந்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இன்று (03) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் எரிபொருள் இல்லாமல் தங்குவதைத் தடுப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், தற்போது IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் டோக்கன்கள் வியாபாரமாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த டோக்கன் முறையானது எமது அமைச்சின் தலையீட்டினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here