Home LOCAL புதிய இராணுவ பதவி நிலை பிரதானி நியமனம்…

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி நியமனம்…

0

இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை (08) முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவ இன்று (07) பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவர், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக கடமைகளைப் பொறுப்பேற்கும் முன்னர், யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி பதவியையும் அதற்கு முன்னர் பல முக்கிய பதவிகளையும் வகித்தார்.

மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவ இலங்கை காலாட்படை படைப்பிரிவின் தளபதியாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here