Home LOCAL சாகரிகா மீது மோதிய கார்!

சாகரிகா மீது மோதிய கார்!

0

காலி-பூஸ்ஸ-வெல்லபட புகையிரத கடவையில் இன்று (01) காலை காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சாகரிகா கடுகதி புகையிரதத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

காரில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தாதி ஒருவரும் மற்றுமொரு பெண்ணும் பயணித்துள்ளதுடன் அவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கார் சேதமடைந்துள்ளதுடன், புகையிரத கடவையில் உள்ள மணி மற்றும் சமிக்ஞை விளக்குகள் பல மாதங்களாக இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இந்த ரயில் கடவையில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here