Home LOCAL சட்டவிரோத எரிபொருள் விற்பனை – 137 பேர் கைது!

சட்டவிரோத எரிபொருள் விற்பனை – 137 பேர் கைது!

0

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 137 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சந்தேகநபர்களிடம் இருந்து 27 ஆயிரம் லீற்றர் பெற்றோலும், 22 ஆயிரம் லீற்றர் டீசலும் மற்றும் 10 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெய்யும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here