வடக்கின் பொன் அணிகளின் போர் என வர்னிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி அணிக்கும் யாழ் சென்யோன்ஸ் அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்ட போட்டியில் யாழ் சென்யோன்ஸ் கல்லூரி அணி 99 ஓட்டங்களினால் வெற்றிவாகை சூடியது.

இப் போட்டி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற்றது.

இதன் படி நாணயச்சுழற்சியின் வெற்றியீட்டிய மத்திய கல்லூரி களத்தடுப்பினை தெரிவு செய்ய.
84.1 ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம்
சென்ஜோன் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.அதனை தொடர்ந்து யாழ் மத்திய கல்லூரி அணி துடுப்பெடுத்தாடிய நிலையில் 45வது ஓவர்களில் அனைத்து விக்கேற்றுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மீண்டும் இரண்டாம் நாள் துடுப்பெடுத்தாடிய சென்யோன்ஸ் அணி 220ஓட்டங்களை பெற்று மொத்தமாக இரண்டுநாள் போட்டியிலும் 387 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.262 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என களம் இறங்கிய யாழ் மத்திய கல்லூரி அணி அனைத்து விக்கேற்றுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை மட்டும் பெற்று 99 ஓட்டங்களினால் தோழ்வியடைந்தது

இருகல்லூரியின் அதிபர்களின் இணைந்த தலைமையில் எஸ்.கே. எழில்வேந்தன்,மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் பரிவோன் கல்லூரி அதிபர் பி. துஸ்சிதரன் ஆகியோர்களின் தலைமையில் இப் போட்டி இடம்பெற்றது.

இப் போட்டியில்
சிறந்த பந்துவீச்சாளராக சென்யோன்ஸ் கல்லூரி அணியின் J.அஸ்னாத்,
சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் ஆட்ட நாயகனாகவும் சென்யோன்ஸ் கல்லூரி அணியின் சபேசன்,
சிறந்த விக்கேற் காப்பாளர் யாழ் மத்திய கல்லூரி அணியின் சாரங்கன் தெரிவாகினர்.

JAFFNA — S.RAVEENAN ( JMMC10 )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here