இன்னும் 4 நாட்களுக்கு மாத்திரமே டீசல் இருக்கின்றது – உதய கம்மன்பில

0
2

நாட்டில் எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாத்திரமே தேவையான டீசல் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

எனினும், டீசலுடனான கப்பல் ஒன்று நாளைய தினம் (02) நாட்டை வந்தடையும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

நாட்டில் தற்போது வரையறுக்கப்பட்ட விதத்திலேயே டீசல் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

டொலர் பிரச்சினையே, நாட்டில் டீசல் பற்றாக்குறைக்கான பிரதான பிரச்சினையாக காணப்படுகின்றது எனவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிடுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here