அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஜனாதிபதி காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
வைத்தியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மார்ச் மாதம் இரண்டாம் திகதியில் இருந்து மீண்டும் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார தொழிற்சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகள் எதுவும் தற்போது வரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.