எம்பிலிப்பிட்டிய – கொலொன்ன பகுதியில் மக்களை அச்சுறுத்தி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கொலொன்ன – வவ்ல்பொல, கும்புறுகமுவ, ஹல்மில்ல மற்றும் கொடகும்புர ஆகிய பகுதிகளில் இவ்வாறு கொள்ளை சம்பவம் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குழுவினர் வீடுகளுக்கு நுழைந்து வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி பணம், தங்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.