Home LOCAL A/L மாணவர்களுக்கு, சுகாதார அமைச்சு விடுத்த அவசர அறிவிப்பு

A/L மாணவர்களுக்கு, சுகாதார அமைச்சு விடுத்த அவசர அறிவிப்பு

0

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் அனைத்து விடயதானங்களுக்குமான பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்கள், தமக்கான இரண்டாவது கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுக்கின்றது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் டொக்டர் சமித்த கினிகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், 12  முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட 745,000 மாணவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இன்றி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

அத்துடன், 16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட 1.1 மில்லியன் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here