அவுஸ்திரேலியாவின் எல்லை முழுமையாக திறப்பு

நாட்டிற்குள் பிரவேசிக்க விஸா அனுமதி பெற்ற அனைவருக்கும் சுமார் இரண்டு வருட காலம் மூடப்பட்டிருந்த அவுஸ்திரேலிய எல்லை, இன்று (21) முதல் திறக்கப்படுகின்றது.

இவ்வாறு நாட்டிற்குள் வருகைத் தருவோர், இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருப்பது கட்டாயமானதாகும்.

அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை, அந்தந்த மாநிலங்கள் தீர்மானிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க எதிர்பார்த்துள்ள மில்லியன் கணக்கானோருக்கு இந்த தீர்மானத்தின் ஊடாக நன்மை கிடைக்கும் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவிக்கின்றது.

தடுப்பூசியின்றி, நாட்டிற்குள் பிரவேசிப்போர், அதற்கான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும்.

அவுஸ்திரேலியாவின் எல்லை குறிப்பிட்டளவு கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி திறக்கப்பட்டிருந்ததுடன், அன்று முதல் இதுவரையான காலம் வரை சுமார் 3 லட்சம் பேர் நாட்டிற்குள் வருகைத்தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here