இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கோவளம் கடற்பரப்பில் தமிழ்நாடு நாக பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு மலேரியா, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மீன்பிடி நீரியள் வள திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்படவுள்ளனர்.