ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வௌியேறுவதாக அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இஸ்ரேலுக்கு எதிரான நீண்டகால நிலைப்பாடுகள் மற்றும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படாமையை காரணமாக முன்நிறுத்தி அமெரிக்கா வௌியேறுவதாக அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், 193 பொதுச்சபை உறுப்பு நாடுகளால் அளிக்கப்பட்ட இரகசிய வாக்குகளில் 168 வாக்குகளைப் பெற்றுள்ள அமெரிக்கா , சீனா மற்றும் ரஷ்யாவை பின்தள்ளி எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆணைக்குழுவில் இணையவுள்ளது.