இந்திய மீனவர்களுக்கு எதிராக A9 பாதையில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக A9 பாதையை மறித்து மீனவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு கடற்பரப்பில் நுழைகின்ற இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்யுமாறும், அவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்களும்,அவர்களது கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் உபகரணங்கள் விடுவிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தியும் யாழ் மீனவர் சங்கங்கள் சில இணைந்து நேற்றைய தினம் எதிர்ப்பு பாத யாத்திரையொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் அதிகளவான இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் நுழைவதாகவும் அவர்களில் ஒரு சிறிய தரப்பினரையே கடற்படை கைது செய்து வருவதாகவும் இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து அமைச்சர் டக்லஸ் தேவானந்தா குறித்த இடத்திற்கு வருகைத்தந்து மீனவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துறையாடி தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறியதை அடுத்து குறித்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here