இந்த அரசாங்கம் வருமையை ஒழிப்பதாக கூறியே ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் வருமையானவர்களை முழுமையாக அழிப்பார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தள்ளார்.
கிரிந்திவல பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டமொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று முன்று வேளை உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்இ கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளினதும் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் மக்களுடைய வருமானம் அதிகாரிக்காமை காரணமாக அவர்களுடைய நுகர்வுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் ஒரு வேளை சாப்பிட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்னும் சில தினங்களில் பஸ் கட்டணங்களும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் நடைப்பயணமாகவே பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாமென்றும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்த அரசின் சுபீட்சத்தின் நோக்கு இதுவா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.