இன்று (23) மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும் மின் விநியோகத் தடை ஏற்படக் கூடிய இடங்கள் தொடர்பில் சரியாக குறிப்பிட முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் பண்டிகைக்கால அதிக மின்பாவனையால் நுரைச்சோலை மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக குறித்த மின்சார விநியோகத் தடை ஏற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.