தேவாலயத்தின் முகப்பு இடிந்து வீழ்ந்ததால் இளைஞன் படுகாயம் – யாழ். வடமராட்சியில் சம்பவம்…!

நேற்று மாலை 5.30 மணியளவில், வடமராட்சி கிழக்கு – புல்லாவெளி செபஸ்தியார் ஆலயத்திற்கு வருகை தந்த கட்டைக்காட்டை சேர்ந்த ஒரு குடும்பம் அங்கு தங்கி நின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் ஆலயத்தின் முகப்பு இடிந்து விழுந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் கட்டைக்காட்டை சேர்ந்த இளைஞன் வினோத் என்பவர் பலத்த படுகாயமடைந்துள்ளார்.
அதோடு அவருடைய மோட்டார் வண்டியும் சேதமாகியுள்ளது.
படுகாயமடைந்த இளைஞர் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆலய முகப்பு இடிந்து விழுந்ததிற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
Jaffna -Raveenan (JMMC 10)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here