கண்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மோசடி தொடர்பில் கணக்காய்வு விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவல்களின் படி குறித்த அலுவலகத்தின் கணக்காய்வாளர் பிரிவு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அலுவலகத்தில் சேவையாற்றும் இரண்டு பெண்களிடம் நீண்ட கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில் குறித்த மோசடி சுமார் 5 வருடங்களாக இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த மோசடியானது 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் இந்த மோசடியில் நேரடியாக ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சுகாதார சேவை உத்தியோகஸ்தர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுனர் லலித்.யு.கமகே திரிவித24 வுக்கு தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரின் கடவுச்சீட்டுகளை இடைநிறுத்துவதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.