எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன்

FILE PHOTO: An employee counts U.S. dollar bills at a money exchange in central Cairo, Egypt, March 20, 2019. REUTERS/Mohamed Abd El Ghany

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டின் கீழ், கடனுதவியை விரைவில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கடனை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையில் நாட்டின் எரிசக்தி அமைச்சு மற்றும் இந்திய எரிசக்தி அமைச்சின் செயலாளர்கள் கைச்சாத்திடவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here