சீனாவின் மிகைப்பட்ட உரிமை மீறல் காரணமாக பீஜிங்கில் இடம்பெறவிருக்கும் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைப் அமெரிக்கா புறக்கணித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பீஜிங் தனது மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள முஸ்லிம் உய்குர்களை நடத்துவது உட்பட சீனாவின் மனித உரிமை மீறலுக்கு எதிராக சீனாவின் குறித்த போட்டிகளைப் அமெரிக்கா புறக்கணிப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் அந்நாட்டு ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் இப்புறக்கணிப்பிற்கு அவுஸ்திரேலியா ஆதரவு தெரிவித்துள்ளதுடன் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அவுஸ்திரேலியாவும் பங்குபெறப் போவதில்லையென தெரிவித்துள்ளது.
அத்துடன் சர்வதேச ஒலிம்பிக் குழு சீனாவின் உரிமை மீறல்களுக்கு எதிரான பகிரங்கப் புறக்கணிப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.