வௌ்ளைப்பூண்டு மோசடி – தொழிலதிபரின் மகனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

வௌ்ளைப்பூண்டு மோசடியில் சிக்கிய மேலும் 4 சதொச அதிகாரிகள்! - ஜே.வி.பி நியூஸ்

சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பம்பலப்பிட்டி தொழிலதிபரின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 வயதுடைய சந்தேகநபர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒரு கோடியே 17 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான இந்த மோசடிக்கு தேவையான போலியான ஆவணங்களை தயாரித்து உதவியதாக குறித்த நபருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் 55 வயதுடைய பம்பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் கடந்த 06 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here