அண்மையில் Sri Lanka Association for Software and Services Companies ( SLASSCOM Sri Lanka ) கொழும்பு Shangri-La Hotel இல் நடாத்திய விருது வழங்கல் விழாவில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் சாய்ந்தமருது சேர்ந்த சவ்பாத் மஜீட் என்ற மாணவன் அவர் உருவாக்கிய விவசாயம் மற்றும் சக்தி தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கு தென் மாகாண பல்கலைக்கழக பிரிவில் சிறந்த கண்டுபிடிப்பு என்ற விருது வழங்கப்பட்டது.
Best Innovation Product/Project –
University Category – Southern Provincial
இம் மாணவன் பாடசாலை காலத்தில் இருந்து பல்வேறு வகையான கண்டுபிடிப்பிளர்களை உருவாக்கி சர்வதேச ரீதியாகவும் வெற்றியீட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம் மாணவன் மாத்தறை பல்கலைக்கழக கல்லூரியில் Food Technology பிரிவில் கல்வி பயிலுவோடு Fonterra Brand Srilanka Company இன் Inter ஆக Research and New Product Department இல் பணியாற்றுகிறார்.
இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி சிறந்த கண்டுபிடிப்பாளர் ஆக வேண்டும். எமது நாட்டிற்கு பெருமை தேடி தர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இம் மாணவன் இந்த வெற்றியை பெற உதவிய இறைவனுக்கும் அடுத்ததாக பெற்றோர்கள்,சகோதரர்கள், குடும்ப உறவுகள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,நண்பர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.
– தகவல் அப்ராத் –