மேலும் வலுவடைந்தது இலங்கை ரூபா – காரணம் என்ன?

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 343 ரூபா 97 சதமாகவும், விற்பனை விலை 56 ரூபா 73 சதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினத்தின் தரவுகளுக்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 351 ரூபா 72 சதமாகவும், விற்பனை விலை 362 ரூபா 95 சதமாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

உலக வங்கியினால் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை கிடைக்கின்றமை, இறக்குமதி கட்டுப்பாடுகள், ஏற்றுமதி அதிகரிப்பு, சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது இடைநிறுத்தப்பட்டமை, பணம் அச்சிடப்படாதமை உள்ளிட்ட காரணிகளினால், இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here