
18 – 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி நாளை (21) முதல் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வயது பிரிவு மாணவர்களுக்கான கொழும்பு மாவட்ட தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றதாக சிறுவர் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷாமன் ரஜீந்திரஜித் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.