ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபவணி சென்ற ஆசிரியர்கள்

ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி இலங்கையிலுள்ள பாடசாலைகள் தோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் பின்னணியில் இன்று ஹெம்மாதகம பிரதேசத்தில் இருந்து விசேட ஆசிரியர் தினக் கொண்டாட்டம் ஒன்றினைப் பதிவு செய்ய கிடைத்தது.

கேகாலை மாவட்டம் மாவனெல்லை பள்ளிபொருவ வித்தியாலயத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஹெம்மாதகமை நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பாடசாலைகள், முன்பள்ளிகள், முஸ்லிம் மத்ரஸாக்கள் மற்றும் தம்ம பாடசாலைகளின் ஆசிரியர்களை ஒன்றிணைத்து ஆசிரியர் தின விழா இன்று இடம்பெற்றது.

இந்த ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் ஹெம்மாதகம நகரகிரி விளையாட்டரங்கில் இருந்து அனைத்து ஆசிரியர்களும் பேண்ட் வாத்தியத்துடன் ஹெம்மாதகம பள்ளிபொருவ வித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற ஆசிரியர் தின விழாவில் பல்வேறு பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான ஆசிரியர்கள் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் பாடல்கள் பாடி, நடனமாடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு ஆசிரியர் தின விழாவை வண்ணமயமாக கொண்டாடினர்.

இன்று இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற வேளையில் இவ்வாறான முன்னுதாரணமான ஆசிரியர் தின விழாவை ஏற்பாடு செய்த பள்ளிப்பொறுவை கல்லூரியின் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் இந்நிகழ்வில் விசேட பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பங்குபற்றிய அனைத்து ஆசிரியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குறித்த பாடசாலைகளுக்கு நினைவுப் பலகைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலைகளின் எதிர்காலத்திற்காக செயற்படும் குழுக்களினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் சிறப்பு தருணங்களின் சில புகைப்படங்களை கீழே காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here