சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருநாகல் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட காலத்திற்குரிய அவருடைய சம்பள நிலுவையையும் அவருக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
42 வயதான டொக்டர் ஷாபி சிஹாப்தீன் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி முதல் கட்டாய விடுமுறையில் அனுப்ப சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது