சமையல் எரிவாயு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தரணிகளின் சேவை இலவசம்

நாடு முழுவதும் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவியை வழங்கும் என்றும் அதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தயாராக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தரம் இல்லாத அரசாங்கத்தைக் கொண்ட நாட்டில் தரமான எதையும் எதிர்பார்க்க முடியாது என்றும் தரமற்ற ஆட்சியை அகற்றுவதே மேற்கொள்ள வேண்டிய விடயம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தரமற்ற உர இறக்குமதியினால் நாடு பெரும் பேரழிவிற்குள் தள்ளப்பட்டுள்ளதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாய சமூகத்தின் வாழ்க்கையையும் அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here