ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் போரா சமூகத்தினரின் தலைவர் டொக்டர் சையதீன் முஃபாதல் சைபுதீன் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (11) மிரிஹனேவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மில்லியனுக்கும் அதிகமான போரா சமூகத்தினர் வாழ்கின்றனர் எனவும் இலங்கைக்கு வருகை தருவதற்கு மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும் எதிர்காலத்தில் தனது சமூகத்தினருடன் இலங்கைக்கு வருகை தர விரும்புவதாகவும் சைபுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் போரா சமூகத்தினர் சார்பாக வழங்கப்பட்ட கொவிட் உதவித் தொகைக்கு சைபுதீனிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.