இலங்கையின் இரு இராணுவ வீரர்களான சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் சுனில் ரத்னாயக்க ஆகியோருக்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் பேரில் அமெரிக்காவினுள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
2008 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதிக்குள் திருகோணமலையைச் சேர்ந்த 11 பேரைக் கொலை செய்தமை தொடர்பில் இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரியான சந்தன ஹெட்டியாராச்சியும் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் காலப்பகுதிக்குள் 8 கிராமவாசிகளைக் கொலை செய்தமை தொடர்பில் முன்னாள் இராணுவ உத்தியோகஸ்தரான சுனில் ரத்னாயக்கவும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இதனடிப்படையிலேயே அமெரிக்கா குறித்த இருவருக்குமான அமெரிக்க விஜயத்திற்கு தடை விதித்துள்ளது.
மேலும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கும் குறித்த பயணத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.