பதுளை சிறைச்சாலைக் கைதிகள் இருதரப்பினருக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்ட கைதிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.