தீங்கு விளைவிக்கக்கூடிய பக்டீரியாக்கள் கொண்ட பசளைகளை ஏற்றி வந்த சீன கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறுவதாக குறித்த கப்பல் மூலமாக அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
குறித்த பசளையை இறக்குமதி செய்வதை தடை செய்யுமாறு கோரி சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையம் தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்வதற்கு அழைக்கப்பட்ட போதே விவசாய அரமச்சர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி நிர்மலன் விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.