நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின்தடை இருக்கக் கூடுமென இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த மின் தடையானது ஒரு மணி நேரத்திற்கு ஏற்படுமெனவும் பி.ப 6 மணி தொடக்கம் பி.ப 9.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த மின்தடை ஏற்படக் கூடுமெனவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின்நிலையம் சீர் செய்யப்படும் வரையில் குறித்த மின் தடை ஏற்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.