இலங்கையில் முதலில் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்ட பெண்ணிற்கு எதிராக சட்ட ரீதியான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பொது சுகாதார ஆய்வாளர் சங்கம் (PHIU) அறிவித்துள்ளது.
நவம்பர் 23 ஆம் திகதி நைஜீரியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய 25 வயதுடைய பெண்ணொருவருக்கு ஒமிக்ரோன் தொற்றுறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது மாரவிலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த பெண்ணிண் வீட்டாரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாததுடன் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட குறித்த பெண் மற்றும் அவருடைய கணவர் ஆகிய இருவரும் தடுப்பூசி பெறாதிருந்த காரணத்தினால் அவர்கள் மீது சட்ட ரீதியிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.